காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கென நியமிக்கப்பட்ட ஆணையாளர்களின் முதலாவது கூட்டம் இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் என்று ஆணையாளர்களில் ஒருவரான நிமல்கா பெர்ணான்டோ நேற்று தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் கூட்டம், தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் கொழும்பு நல்லிணக்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் இயங்குவதற்கான கட்டடம் ஒதுக்கப்பட்ட பின்னர் அலுவலகத்துக்கு தேவையான ஊழியர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுவர் எனவும், பின்னர் காணாமற் போனோர் அலுவலகம் வெகுவிரைவில் இயங்க ஆரம்பிக்குமெனவும் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.