யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.