காணாமற் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்­கென நிய­மிக்­கப்­பட்ட ஆணை­யா­ளர்­களின் முத­லா­வது கூட்டம் இவ்­வாரம் கொழும்பில் நடை­பெறும் என்று ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான நிமல்கா பெர்­ணான்டோ நேற்று தெரி­வித்தார்.

காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் கூட்டம், தலைவர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் கொழும்பு நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தில் நடை­பெறும் என்றும் காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான கட்­டடம் ஒதுக்­கப்­பட்ட பின்னர் அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான ஊழி­யர்கள், அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டுவர் எனவும், பின்னர் காணாமற் போனோர் அலு­வ­லகம் வெகு­வி­ரைவில் இயங்க ஆரம்பிக்குமெனவும் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.