கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இதேவேளை, இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.