இலங்கையர்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்தரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.அனைத்து சமூகங்களுக்கும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூக உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்