Header image alt text

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின், புதிய செயலாளராக சந்தியா விஜயபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றுமாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை, அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் அடையாளம் காட்டினர். Read more

கிளிநொச்சி தனியார் சிற்றூர்தி உரிமையாளர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முறிகண்டி தொடக்கம், பரந்தன் நோக்கி செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையில் ஈடுபடுபவர்களை கடந்த சில தினங்களிற்கு முன்பும், தனிநபர்கள் தாக்கியதாக தெரிவித்தே அந்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்.

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.   Read more

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி உத்தியோகபூர்வு இல்லத்தில் சந்தித்தார். இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக இடம்பெறும் வருடாந்த விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுடன், அபிவிருத்தி முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு ஆதரவு எதிர்காலத்தில் கிடைக்கும் என ஜெப்ரி பெல்ட்மென்ரூnடிளி;இதன்போது தெரிவித்துள்ளார். Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். 2007ஆம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக முஷாரப் மீது 2014ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொதுமக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அப் பகுதிகளில் இரவுவேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டுவந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். Read more

கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள காணியில் காயங்களுடன் மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அவர் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 71 வயதான இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.