ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி உத்தியோகபூர்வு இல்லத்தில் சந்தித்தார். இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக இடம்பெறும் வருடாந்த விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுடன், அபிவிருத்தி முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு ஆதரவு எதிர்காலத்தில் கிடைக்கும் என ஜெப்ரி பெல்ட்மென்ரூnடிளி;இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை அவர், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்தார். இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதேவேளை ஜெஃப்ரி ஃபெல்ட்மென் இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

அத்துடன், ஜெப்ரி பெல்த்மென், பாதுகாப்புத்துறை செயலாளர் கபில வைத்தியரட்னவையும் சந்தித்து உரையாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, தேசிய நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் மற்றும் காணி விடுவித்தல் தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும்; செயலாளர் நாயகத்திற்கு இந்த சந்திப்பின் போது விளக்கப்பட்டுள்ளது. அரசினால், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் குறித்து அவர் திருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பின் அமைச்சு மற்றும் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜெஃப்ரி ஃபெல்ட்மென், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.