ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்.

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.  பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். 30 நாடுகளின் அரச தலைவர்களும், 500 இராஜதந்திர மட்டப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.