கிளிநொச்சி தனியார் சிற்றூர்தி உரிமையாளர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முறிகண்டி தொடக்கம், பரந்தன் நோக்கி செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையில் ஈடுபடுபவர்களை கடந்த சில தினங்களிற்கு முன்பும், தனிநபர்கள் தாக்கியதாக தெரிவித்தே அந்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் அனைவரும் பரந்தன் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த பகுதிக்கு காவற்துறையினர் வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைக்கமைய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.