Header image alt text

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்றும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். Read more

திருகோணமலை நிலாவெளி, பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பூஜை வழிபாடொன்றிற்காக வந்து அங்கு குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். ஊர்காவற்துறை பகுதியில், உணவு ஒவ்வாமையால், 98 பேர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே இவ்வாறு, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில், அந்தோனியார் ஆலய நிர்வாகத்தால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை உதவிப் பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்றுடன் இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்கின்றார்.

கடந்த வியாழக்கிழமை மாலை அவர் தமது விஜயத்தை ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமை முதல் ஜனாதிபதி, பிரதர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு பிரதானி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளின் போது அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. Read more

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Read more

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 19.3 சதவீத அதிகரிப்பாகும்.

சீனா, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 235,618 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.