யாழ். ஊர்காவற்துறை பகுதியில், உணவு ஒவ்வாமையால், 98 பேர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே இவ்வாறு, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில், அந்தோனியார் ஆலய நிர்வாகத்தால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.அந்த உணவை உட்கொண்டவர்கள், தீடிரென மயக்கடைந்து விழுந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.