இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை உதவிப் பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்றுடன் இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்கின்றார்.

கடந்த வியாழக்கிழமை மாலை அவர் தமது விஜயத்தை ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமை முதல் ஜனாதிபதி, பிரதர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு பிரதானி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளின் போது அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. குறிப்பாக அரசியல் யாப்பினை உருவாக்குதல், காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் விடயங்கள், மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களை விரைவுப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டிருந்தது. இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்று பிரதமருடன் தாம் கலந்துரையாடி இருப்பதாகவும்,இவை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும், ஜெஃப்ரி ஃபெல்ட்மென் உறுதியளித்திருந்தார்.