ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் நேற்று ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானத்தில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து கிடைக்கும்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையினருடன் அங்கு விரைந்து சென்று சிதறி கிடந்த 11 பேரின் உடல்களை மீட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 66 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.