இந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையானது அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, 15வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது. இந்த வருடம் பாடசாலை மாணவர்களுக்காக 350,000 புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.