Header image alt text

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வால்கர் நெதர்கூர்ன் இன்று கிளிநொச்சியில் சந்தித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 387 ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெயின்ஸ் வால்கர் நெதர்கூர்ன் மற்றும் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சந்தித்துக் கலந்துரையாடினர். Read more

இலங்கையில் சமூகவலைத்தளங்களுக்கான தடை நீண்ட நாட்களாக தொடர்வதால், நாட்டின், சுற்றுலாத் துறை, தகவல் தொடர்பாடற் துறை மற்றும் பொருளாதாரத் துறை என்பவற்றுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது

என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அதுல் கேசப் கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் கௌரவம் மற்றும் வெளிப்படைத் தன்மையிலும் மேற்படி தடை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதுல் கேசப் டுவிட் செய்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (ஏiடிநச) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கண்டியில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜப்பான் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
Read more

யாழ். வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.

மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது. இந்நிலையில் அவரது சடலம் இன்றுகாலை வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், தொழிலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாவத்தைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 51), இமானுவேல் மிரண்டா (வயது 48), மிதுறதன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more

ஜப்பான் – இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் பேரரசர் அகிஹினோவை சந்தித்துள்ளார்.

டோக்கியே நகரில் உள்ள இம்பீரியஸ் மாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வளை­த­ளங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Read more

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

42 வயதான  இலங்கை தமிழ்ப் பெண்ணான பிரியங்கா ஜெயசங்கர் என்பவரே  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சவுதி பிரஜை ஒருவரே இந்தக் கொலையை புரிந்துள்ளார். பின்னர் அந்த சவுதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.