காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வால்கர் நெதர்கூர்ன் இன்று கிளிநொச்சியில் சந்தித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 387 ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெயின்ஸ் வால்கர் நெதர்கூர்ன் மற்றும் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.