யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானதென கருதப்படும் சீருடையும், வெடிப்பொருட்களும் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்க்குழாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியாளர்களுக்கு குறித்த பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து, அவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்இதனையடுத்து, குறித்த இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, விடுதலைப்புலிகளின் சீருடையின் மேல் பகுதி ஒன்றும், 2 வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.