முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், தொழிலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாவத்தைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 51), இமானுவேல் மிரண்டா (வயது 48), மிதுறதன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து, நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சென்று தேடுதல் நடாத்தியபோதும், குறித்த மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த மீனவர்களை மீட்க கடற்படையினர் உதவி புரியவேண்டுமென நாயாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.