அவ­ச­ர­கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப­டாது. நாட்டில் தற்­போ­துள்ள இன­வாத முரண்­பா­டு­களை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்­திய பின்னர் வெகு விரைவில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

நாட்டில் கடந்த காலங்­களில் இருந்து இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற சிங்­கள பௌத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும். ஆகவே முதலில் சிங்­கள பௌத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­ப­டு­வது குறித்தும் நாட்டின் தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்­பிலும் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
இந்த நாட்டில் மக்கள் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­ததன் நோக்­கத்தை நாம் நிறை­வேற்ற வேண்டும். முன்­னைய ஆட்­சியின் ஊழல், குற்­றங்கள் மற்றும் கொள்ளை சம்­ப­வங்கள் குறித்து உரிய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­று­கொ­டுக்க வேண்டும் என்ற பிர­தான நோக்­கமே மக்கள் மத்­தியில் இருந்­தது.

ஆகவே அதனை நிறை­வேற்ற வேண்­டிய கடமை எம்­மத்­தியில் உள்­ளது. அதே­போன்று இப்­போ­தைய ஆட்­சியில் நடந்த குற்­றங்கள் குறித்தும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். எனினும் முன்­னைய ஆட்­சியில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க முடி­ய­வில்லை. ஆனால் நாம் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் நட­வ­டிக்­கையை எடுத்­துள்ளோம். பிர­தமர் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்ட கார­ணத்­தினால் தான் விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ளித்தார்.

இவை முன்­னைய ஆட்­சியில் ஒரு­போதும் இடம்­பெற்­ற­வில்லை. சட்­டத்­தினை ஆட்­சி­யா­ளர்கள் கைகளில் வைத்­தி­ருந்­தனர். அதனை எவரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்து விமர்­சிக்க இடம் இன்று உள்­ளது. நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் வரை செயற்­ப­டுவோம். அதே­போன்று மத்­திய வங்­கி­யுடன் தொடர்­பு­பட்ட முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் குற்­றங்­க­ளுக்கும் தண்­டனை வழங்­கப்­படும்.

இந்த அர­சாங்­கத்தில் இன­வாத தூண்­டு­தல்கள் இடம்­பெ­ற­வில்லை. எனினும் ஒரு சிலர் தமது அர­சியல் தேவைக்­காக மக்­களை தூண்­டி­விடும் செயற்­பா­டு­களை கையாள்­கின்­றனர். கண்டி இன­வாத சம்­பவம் குறித்து உட­ன­டி­யாக அர­சாங்­க­மாக நாம் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அவ­ச­ர­கால சட்­டத்தை பிர­யோ­கித்து அதன் மூல­மாக நிலை­மை­களை நாம் கட்­டு­ப­டுத்­தி­யுள்ளோம். இழப்­பு­களை கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம். எனினும் சொத்து சேதங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

அதற்­கான நட்­ட­ஈடு வழங்­க­வுள்ளோம். இந்த நிலை­மை­களில் அர­சாங்­கத்தை விமர்­சிக்­கின்­றனர். எனினும் நாம் இதனை கட்­டு­ப­டுத்­தாது அல்­லது அதி­யுச்ச அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இழப்­புகள் அதி­க­மாக இருந்­தி­ருக்கும். அவ்­வா­றான நிலை­மையில் நாட்டில் மேலும் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டி­ருக்கும். மத அமைப்­புகள் என்ற பெயரில் இன­வா­தத்தை தூண்டும் நபர்கள், குழுக்கள் அனைத்­துமே தடை செய்­யப்­ப­ட­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இந்த நாட்டில் இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற்ற சிங்­கள பௌத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும், ஆகவே முதலில் சிங்­கள பௌத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும்.

அவ­ச­ர­கால சட்­டத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து கொண்­டு­செல்­வ­தாக கூறு­வதில் எந்த உண்­மையும் இல்லை. நாட்டில் பிரச்­சி­னைகள் நில­விய நிலை­மையில் தான் அவ­ச­ர­கால சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்டு நிலை­மைகள் கட்­டு­ப­டுத்­தப்­பட்­டன. ஆனால் தொடர்ந்தும் நாம் அவ­ச­ர­கால சட்­டத்தை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தில்லை. இன்றும் நாட்டில் சில குழப்­பங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆகவே வெகு விரைவில் நிலை­மை­களை சரி­செய்­து­விட்டு அவ­ச­ர­கால சட்­டத்தைக் நீக்குவோம். அதற்கு உரிய அமைச்சராக நான் வாக்குறுதி வழங்குகின்றேன். இப்போதும் நாட்டின் நிலைமைகள் குறித்து பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். விரைவில் நிலைமைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவசரகால சட்டமும் நீக்கப்படும். அதேபோல் முகப்புத்தகம், உள்ளிட்ட தற்போது தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைப்பதிவு தளங்கள் வெகு விரைவில் வழமைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.