தமது பணிகளை இலகுவான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மக்களின் ஆதரவை கோரியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசியல் யாப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய இந்த அலுவலகம் அமைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 28 ஆம் திகதி, 7 பேர் கொண்ட அந்த குழுவுக்கான தலைவரையும், உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமித்தார். இந்நிலையில், தமது பணிகளை இலகுவான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.