இன்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி வைபர் (ஏiடிநச) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது. எவ்வாறாயினும் பேஸ்புக் மீதான தடை நீக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.