Header image alt text

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. Read more

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பலப்படுத்தப்பட்ட நட்புறவு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில், இலங்கை – ஜப்பானுக்கிடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்த உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அறிவற்ற விதத்தில் தொடரூந்து பயணிகளுக்கு அச்சத்தையும், பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டுபிடித்து

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு புகையிரத நிலைய அதிகாரிகள் ஏறாவூர் காவற்துறையினரையும் பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் தொடரூந்து பாதையை ஒட்டியுள்ள பள்ளிவாசல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும் அந்த அதிகாரிகள் கேட்டுள்ளனர். Read more

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும், பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. Read more

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தில் பணியாற்றும் சட்ட அதிகாரி ஒருவரும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்தில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகளை சுவிட்சர்லாந்தின் பெலின்சோனா பிராந்திய குற்றவியல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தநிலையில், இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக, சுவிஸ்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்கிறது.

வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்ற நிலையில், இதனை முன்னிட்டு இன்று கண்டனப் பேரணியையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more