ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பலப்படுத்தப்பட்ட நட்புறவு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில், இலங்கை – ஜப்பானுக்கிடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்த உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், ஜப்பான் நாட்டை இலங்கை தமது நெருங்கிய நட்பு நாடாக கருதி செயற்பட்டு வருவதுடன், எதிர்காலத்திலும் இந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.