புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகளை சுவிட்சர்லாந்தின் பெலின்சோனா பிராந்திய குற்றவியல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தநிலையில், இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக, சுவிஸ்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதேநேரம் கடந்த எட்டு வாரங்களாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. இதற்காக 4 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.