இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தில் பணியாற்றும் சட்ட அதிகாரி ஒருவரும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்தில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆயுர்வேத உற்பத்தி நிறுவனம் ஒன்றின் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்காக சந்தேகநபர்களால் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் அந்த தொகை இரண்டரை இலட்சமாக குறைக்கப்பட்டு, அதன் முதல் கட்டமாக 50,000 ரூபா இலஞ்சத்தை பெற்றுக் கொள்ளும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.