ஏதிலிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் நோர்த் கோர்ட் பகுதியில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஏதிகளுக்கான நடவடிக்கை கூட்டணியினால், கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 100 பேர் பங்கேற்றிருந்தாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஏதிலிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இப் பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவில் நிதித்துறை தொழிற்சங்க அமைப்பளராக தற்போது பணியாற்றும் இலங்கை அகதியான, ஆரன் மயில்வாகனம், அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சாந்த ரூபன் என்ற தமிழ் ஏதிலி, புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாகவும், அவரின் வாழ்க்கை குறித்து தாம் அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.