பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையில் இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இன்றைய தினம் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர். 14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.