சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது. Read more