மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார்.

கிடைத்த தகலொன்றையடுத்து, குறித்த பிரதேசத்தில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்களிடமிருந்து சொட்கண் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.