மட்டக்களப்பு குமாரபுரம் பகுதியில் நேற்றுமாலை குழுவின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்து மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம், குமாரகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரேந்திரன் என்பவர் தனது வீட்டை நோக்கி நேற்றுமாலை 5.30 மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் அவரை வழிமறித்த குழுவினர் அவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்தவரின் தம்பிக்கும், வாள்வெட்டுக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.