முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடு காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.

கொண்டைமடு வீதியின் காட்டுப்பகுதியில், புலிகளால் பாவிக்கப்பட்ட தமிழன் எனப்படும் கைக்குண்டுகள் பல காணப்படுவதாக, முள்ளியவளை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முள்ளியளை பொலீஸார் குறித்த பகுதிக்கு சென்று கைக்குண்டை அடையாளப்படுத்தி, இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து, விசேட அதிரடிப்படையினர் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, குறித்த கைக்குண்டை அகற்றி தகர்த்ழித்துள்ளனர். இது, போர் நடைபெற்ற காலத்தில், புலிகளால் தயாரிக்கப்பட்டு போரின் போது பாவிக்கப்பட்ட தமிழன் வகை கைக்குண்டு என்றும், இந்த கைக்குண்டுகள் குண்டு கவசத்துடன் காணப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்