நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.