கொழும்பு – ஆமர் வீதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்ற தம்பதியினர் சென்ற வாகனம்மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமைந்துள்ள மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில், கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த என்டனி ராஜ் என்ற 42 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச்செல்லும் காட்சி அருகில் அமைந்திருந்த விற்பனையகத்தின் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.