திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வொன்றுக்காக திருகோணமலை சென்றிருந்த அவர், இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தார். காணாமல் போனோர் விடயத்தில் உரிய நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 383 நாட்களாக திருகோணமலை ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் இடம்பெற்று வருகிறது. அதேபோன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒரு வருடத்தைக் கடந்தும் போராட்டம் நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.