ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உள்ளாட்சி சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர்கள், உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் தோழர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் சந்திப்பில்.வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ கந்தைய்யா சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினரும் “உமாமகேஸ்வரன் பவுண்டேசனின்” தலைவருமான கௌரவ தோழர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட புளொட் அமைப்பாளர் தோழர் சந்திரகுலசிங்கம் மோகன் உட்பட வவுனியா நகர,பிரதேச சபைகளிற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில்(TNA) போட்டியிட்ட உறுப்பினர்கள், தோழர்கள் என கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ் சந்திப்பில், எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் கடந்த கால நகரசபைநிர்வாகம் நடாத்தியபோது ஏற்பட்ட அனுபவங்கள் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டு செயலாற்ற வேண்டிய விடயங்கள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இவ் சந்திப்பு ஆரோக்கியமாகவும் உணர்வுபூவமானதாகவும் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.