யாழ்ப்பாணம் அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உடல் சிதறுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய செல்லையா கந்தசாமி என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபரில் உடல் பாகங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.