வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
36 வயதுடைய சிவநாதன் தவரூபன் எனும் நபரே உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸாரிடம் கூறியுள்ள உயிரிழந்தவரின் தாய், தனது மகன் சில நாட்களாக ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.