கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டிற்கு அருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில் குறித்த குண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.