வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வு வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.