பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணையை கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதில் 51 பேர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாவர். இப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் டி.பி. ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, காதர் மஸ்தான், சுசந்த புஞ்சிநிலமே ஆகிய நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.