கிண்ணியா கெங்கை மணல்ஆறு பிரதேசத்தில் காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞர் என தெரியவந்துள்ளது.
மகாவலி ஆற்றில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் காவல்துறையினர் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார். இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞனே கடற்படையினரின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்து, மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.