போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்க, தமது நாட்டின் அரசாங்கம் ஆதரவளிக்காது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகுமா இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதித்துறையினரின் பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஜெனீவா 2015 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஆதரவளிக்காது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் இயலுமை இலங்கையிடம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.