Header image alt text

இலங்கையின் கடற்தொழில் திட்டங்களுக்கு, நியூசிலாந்து முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்கர் ((Joanna Kempker) இதனை தெரிவித்துள்ளார். கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை, அவரது அமைச்சில் சந்தித்து இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ். மாநகரசபை அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read more

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது. Read more

தங்களுக்கான நீதி கிடைக்கும் வரையில், தங்களது போராட்டம் தொடரும் என்று, காணாமல் போனோரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையிலும், காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலும், காணாமல் போனோரது உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கலாரஞ்சனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.

வாகங்களிலும் கப்பலிலும் இருந்த பெறுமதி வாய்ந்த தொலைத் தொடர்புகள் சாதனங்கள், பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட பின்னர் அவை இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்க செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Read more