தங்களுக்கான நீதி கிடைக்கும் வரையில், தங்களது போராட்டம் தொடரும் என்று, காணாமல் போனோரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையிலும், காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலும், காணாமல் போனோரது உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கலாரஞ்சனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.