Header image alt text

மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

அன்னாரின் ஈமைக்கிரியைகள் கந்தரோடை மேற்கு சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை(28.03.2018) புதன்கிழமை காலை 10மணியளவில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றும் என அறியத்தந்துள்ளார்கள்.

தகவல் PLOTE , DPLF தலைமையகம்

துயர்பகிர்வு

அமரர் திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி

மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

PLOTE, DPLF

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

இந்த மனு கடந்த 22 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில விசாரணைக்கு எடுத்து கொண்ட போது இன்று வரை அவரை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பினை நடத்தினர். இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர், கலாரஞ்சனி இதனைக் கூறினார். Read more

ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அநேகமானோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலும் 10 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடத்தொகுதியின் மேல் மாடியிலேயே முதலில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 660 தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நேற்று மாலை கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 5 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். Read more