ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அநேகமானோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலும் 10 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடத்தொகுதியின் மேல் மாடியிலேயே முதலில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 660 தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.