Header image alt text

வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். சிறையில் தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து, கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர். அவர்களை கலவர தடுப்புப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று இரவு நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

முன்னைநாள் உடுவில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் ஈமைக்கிரியைகள்

28.03.2018 புதன்கிழமை காலை 10.00மணிக்கு கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் கந்தரோடை சங்கம்புலவு மயானத்தில் நடைபெற்றது. அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளுராட்சி சபை அங்கத்தவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகததில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். Read more

உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Read more

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பார்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதிய போதும் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 4 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்ததை தொடர்ந்து நேற்றுக் காலை கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார். Read more

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் 27.03.2018 அன்று கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more