முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் 27.03.2018 அன்று கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சூரிபுரம் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சண்முகலிங்கம் நிமலன் என்ற திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன இளைஞனே உயிரிழந்துள்ளார். முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.