Header image alt text

உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Read more

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பார்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதிய போதும் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 4 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்ததை தொடர்ந்து நேற்றுக் காலை கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார். Read more

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் 27.03.2018 அன்று கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more

கண்ணீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 29th March 2018
Posted in செய்திகள் 

கண்ணீர் அஞ்சலிகள்

எமது தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அன்னை திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் பிரிவினை மிகுந்த கவலைகளுடன் ஏற்றுக்கொண்டு அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களினதும் அவரது புத்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தனினதும் பண்பட்ட, மக்கள் நலன் சார்ந்த, எளிமையான தலைமைத்துவங்களின் பின்னால் சரஸ்வதி அம்மாவின் செயற்பாடுகள் உறுதியான ஆதாரமாக அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.

இரண்டு மகத்தான மக்கள் பிரதிநிதிகளை பாசத்துடனும், பண்புடனும், பரிவுடனும் வழிநடாத்திய சரஸ்வதி அம்மா அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே வாஞ்சையோடும், உரிமையோடும் தனது மகனின் கட்சித் தோழர்களையும் அரவணைக்கத் தவறியதில்லை.
Read more

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ்ப்பாண மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். Read more

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இல 142, பேஸ்லைன் வீதி, கொழும்பு 9 இல் அமைந்துள்ள சிறைச்சாலை ஆணையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில், குற்ற விசாரணை திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுத கப்பலுக்கு பொறுப்பாகவிருந்த விஜயதுங்க திலகரத்னவே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், லயனகேமுல்ல, சீதுவயைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

அன்னாரின் ஈமைக்கிரியைகள் கந்தரோடை மேற்கு சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை(28.03.2018) புதன்கிழமை காலை 10மணியளவில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றும் என அறியத்தந்துள்ளார்கள்.

தகவல் PLOTE , DPLF தலைமையகம்

துயர்பகிர்வு

அமரர் திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி

மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

PLOTE, DPLF

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

இந்த மனு கடந்த 22 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில விசாரணைக்கு எடுத்து கொண்ட போது இன்று வரை அவரை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.