Header image alt text

இலகு தொடரூந்து முறைமையினை இலங்கை தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடரூந்து சேவை ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைய 7 இலகுரக தொடரூந்து பாதைகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது திட்டம் முன்னுரிமை அடிப்படையில் கொழும்பில் இருந்து பொரளை, பத்தரமுல்ல, ஊடாக மாலபேக்கு அமைக்கப்படவுள்ளது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க செயலணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள, அவர் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். இந்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மகளிர் அமைப்புகளின் இணையத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மா நகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும், நாளை முதல் நவீன முறையில் கணினி மயப்படுத்தப்படவுள்ளது.

இதன்பிரகாரம், மா நகர சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, நிதிப் பிரிவு ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மக்களுக்கு அதி விரைவான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்கவுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாக காரணமாகும்.

இதனைக் காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தலாம். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் விடுக்காமல் உள்ளது. Read more

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 22 வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து, குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலிகள் உட்பட 20 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக இனம் காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இது சாத்தியமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் ((URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி ((Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் யுஆர்எல்-களை பயனர்கள் ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு அல்லது இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர முடியும். ஏப்ரல் 13ம் திகதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்-களை உருவாக்க முடியுமென மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more

நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் இன்று காலை, பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில், நுவரெலியா, வெலிமடை, ஹக்கல, நானுஒயா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்கள் இடம்பெற்றன.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். Read more

சொத்து விபரங்களை வெளிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி, இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார். குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read more

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களினது விண்ணப்பங்கள் சமீப காலமாக வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் தரவுகளை வெளிப்படுத்துமாறு அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நசபி நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் பரோன்ஸ் வில்லியம்ஸ் இதனை தெரிவித்துள்ளார். Read more